Paristamil Navigation Paristamil advert login

நாற்பது வயதில் தாய்மை! - பிரான்சின் சாபக்கேடு!

நாற்பது வயதில் தாய்மை! - பிரான்சின் சாபக்கேடு!

1 ஐப்பசி 2016 சனி 10:30 | பார்வைகள் : 19396


பிரெஞ்சு புதினம் இத்தகவலை கொண்டுவந்தாலும்... இது புதினம் இல்லை. பிரெஞ்சு பெண்களில் 20இல் ஒருவர் 40 வயதுக்கு பின்னர் தான் முதல் தடவை தாய்மை அடைகின்றனர் என சொல்கிறது ஒரு ஆய்வு! 
 
கடந்த வியாழக்கிழமை, பிரான்சின் கருத்துக்கணிப்பு நிறுவனமான Insee நிறுவனம் மேற்படி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டில்  799,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இக்குழந்தைகளின் 5 வீதமான தாய்மாருக்கு 40 வயதை கடந்துள்ளது எனவும், அதுவே அவர்களின் முதல் பிரசவம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சில தசாப்தங்களுக்கு முன்னர் பெண்கள்,  தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குழந்தைப் பேறை தள்ளி போட்டுள்ளனர். 20 வயது தொடக்கம் 30 வரையான வாழ்க்கையில் சாதிக்கும் துடிப்போடு குழந்தை பிறப்பை தள்ளி போட்டுள்ளனர். 30 வயதுக்கு பின்னர் குழந்தை பெற்றுக்கொண்டு வந்த பெண்கள், தற்போது 40 வயது வரை கொண்டு செல்கிறார்களாம். மேலும் பலர் 40 வயதில் தான் தாய்மை அடைகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த  1981 ஆண்டை விட 17 வீதம் அதிகரித்துள்ளது. 
 
அண்ணளவாக 30.3 வயதில் தான் பிரெஞ்சு பெண்கள் தாய்மை அடைகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  உணவு பழக்கவழக்கம் உட்பட பிற காரணிகளே தாமதமான தாய்மைக்கு காரணம் என தெரிவித்துள்ளது மேற்படி நிறுவனம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்