Paristamil Navigation Paristamil advert login

பரிசின் அடையாளம் - Théâtre Mogador!!

பரிசின் அடையாளம் - Théâtre Mogador!!

26 புரட்டாசி 2016 திங்கள் 12:30 | பார்வைகள் : 18750


Théâtre Mogador எனும் பெயரை நேற்றைய தினம் பரவலாக கேள்வி பட்டிருப்பீர்கள்!! இந்த திரையரங்கில் நேற்று காலை தீப்பற்றிக்கொண்டது. ஆனால் அந்த செய்தியை விடவும்.. இந்த திரையரங்கு குறித்து பல தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். 
 
பரிசின் 9ம் வட்டாரத்தில், rue de Mogador பகுதியில் இருக்கும் இந்த திரையரங்கில் ஒரே சமயத்தில் 1,800 பார்வையாளர்கள் வரை அமர்ந்திருக்கலாமாம். 
 
இசை நிகழ்ச்சிக்கான அரங்கு... நாடக மேடை... அல்லது வேறு பல பொது நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்ட இந்த அரங்கு எப்போதும் 'பிஸி'யான ஒரு அரங்காகும்.
 
1913 ஆம் வருடம் கட்டப்பட்டதாக தகவல்கள் சொல்கின்றன. 103 வருடங்கள் ஆகிவிட்டது. கட்டிடம் பழமையானது, ஆனால் பழசானது இல்லை! 
 
முன்னர் Palace Theatre எனும் பெயரில் அழைக்கப்பட்டிருந்தது. பின்னர் Théâtre Mogador என பெயர்மாற்றம் கண்டது. Mogador என்பது மொராக்கோ நாட்டின் ஒரு கிராமத்தின் பெயர் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி Franklin D. Roosevelt, 1919 ஆம் ஆண்டு திறந்துவைத்தார்.
 
எண்ணற்ற இசை நிகழ்ச்சிகள், இசை கலைஞர்கள், இசை ஜாம்பவான்களை கண்டது இந்த மேடை. 2005இல், மேடை நாடகங்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான  Molière Awards விருது (19 ஆவது விருது) இவ் மேடையில் வழங்கப்பட்டது.
 
இங்கிலாந்தைச் சேர்ந்த கட்டிடக்கலை மாமமணி Bertie Crewe எனும் ஆர்கிடெக்‌ஷர் இந்த கட்டிடத்தை வடிவமைத்து கட்டிமுடித்தார். மனுஷன் இலண்டனில் எண்ணற்ற திரை அரங்குகளை வடிவமைத்துள்ளார். பிரான்சில் வடிவமைத்து கட்டிய திரையரங்கு இது ஒன்றாகும்.
 
திரையரங்கிற்கு வரும் அனைவரும்  மிக கெளரவமாக நினைக்கவேண்டும் என்பதற்காகவே சிவப்பு நிற கம்பளம் விரிக்கப்பட்டும், சிவப்பு நிறத்திலான இருக்கைகளையும் வடிவமைத்துள்ளார்கள். 
 
25, rue de Mogador, Paris எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த திரை அரங்கை நீங்கள் இதுவரை பார்க்கவில்லையா? நடைபெற இருக்கும் ஏதேனும் ஒரு இசை நிகழ்ச்சிக்கு இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்