தமிழரை ஒருபோதும் கைவிடவேமாட்டோம் - அநுர அரசாங்கம் அறிவிப்பு

20 சித்திரை 2025 ஞாயிறு 05:21 | பார்வைகள் : 1987
"எமது கட்சியை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்." - என்று தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல நாடெங்கிலும் வாழும் தமிழ் மக்கள், கடந்த இரண்டு பிரதான தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளார்கள்.
இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள், எமது கட்சிக்கு அமோக ஆதரவு வழங்கினார்கள். அதேபோல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தமிழ் மக்கள் எமது கட்சிக்குப் பேராதரவு வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்.
எமது கட்சியை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம். நாட்டில் இனவாதம், மதவாதம் இல்லாத ஒரேயொரு கட்சியே தேசிய மக்கள் சக்தி. அதனால்தான் தமிழ் மக்கள் எமது கட்சிக்கு அமோக ஆதரவு வழங்குகின்றார்கள்
அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியே தீருவோம். இந்த நாட்டில் சிங்கள மக்களைப் போல் தமிழ், முஸ்லிம் மக்களும் சகல உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே எமது விருப்பம் என மேலும் தெரிவித்தார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1