வரலாற்றுப் பக்கம் : ஆல்ப்ஸ் மலை மேல் விமானத்தை செலுத்தியவர்!

23 புரட்டாசி 2016 வெள்ளி 10:29 | பார்வைகள் : 21740
அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்தும் இருக்கும் என்பார்கள்! ஆல்ப்ஸ் மலை அழகின் உச்சம்... ஆபத்தின் உச்சமும் கூட! அமைதியாக... சாந்த சொரூபியாக தோற்றமளிக்கும் ஆல்ப்ஸ் மலை பல இலட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கிக்கொண்டு தான் அங்கே நிற்கிறது!! ஆனால் அது ஒன்றும் ஆல்ப்ஸ் மலையின் தப்பில்லையே!! மலையேறுகிறேன்... 'விங் ஷூட்' கட்டிக்கொண்டு பறக்கிறேன் என கிளம்பியவர்கள் தான் பலியானவர்கள். இதோ... இந்த சம்பவத்தை பாருங்கள்!!
1910 ஆம் ஆண்டு அது. இத்தாலியைச் சேர்ந்த aero club நிறுவனம் விடுத்திருந்த போட்டி அது. விமானம் மூலம் ஆல்ப்ஸ் மலையை கடந்தால் 20,000 டாலர்கள் ரொக்கப்பணம் பரிசு என. (1910 ஆம் ஆண்டு 20,000 டாலர்கள் என்பது மிகப்பெரிய தொகை..!!)
இதோ.. நான் பறக்குறேன் பார்... என கிளம்பியவர் பரிசை சேர்ந்த கத்துக்குட்டி விமானி Jorge Chávez. (செப்டம்பர் 23 - இன்றைய தினம்) விமானத்தை எடுத்துக்கொண்டு பறந்தவருக்கு... விதி வேறு விதத்தில் சதி செய்தது..! எதிர்பாராத பனிப்பொழிவும்... காற்றும் சேர்ந்து.. விமானத்தின் இறக்கையை உடைத்து தள்ளியது. விமானம் மலையில் உறைந்திருந்த பனிப்பாறையில் போய் குத்தி நின்றது. பின்னர் மீட்புக்குழுவால் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு.. நான்கு நாட்களின் பின்னர் பலத்த இரத்தக்கசிவால் உயிரிழந்தார்.
Jorge Chávez இன், தன்னம்பிக்கைக்காவே இவரின் பெயரில் ஒரு விமான நிலையமும்... விமானி பயிற்சி கல்லூரியும் அமைக்கப்பட்டது! கூடவே 'முதன்முறையாக விமானம் மூலம் ஆல்ப்ஸ் மலையைக் கடக்க முயன்றவர்!' என விக்கிப்பீடியாவில் ஒரு பக்கமும் உருவாக்கப்பட்டது!!
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025