இந்தியாவில் விளையாட மாட்டோம்! பாகிஸ்தான் கிரிக்கெட் அணி திட்டவட்டம்

20 சித்திரை 2025 ஞாயிறு 13:06 | பார்வைகள் : 118
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வர பாகிஸ்தான் அணி மறுத்துவிட்டது.
மகளிர் ஐசிசி உலகக்கிண்ண தொடர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது.
நடப்பு சாம்பியன் ஆன அவுஸ்திரேலிய அணி இதில் விளையாட உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் போட்டிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுப்பயணம் செய்ய முடியாது என பாகிஸ்தான் அணி மறுத்துள்ளது.
அதற்கு பதிலாக, முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட கலப்பின மாதிரியின்படி பொதுவான இடத்தில் தங்கள் போட்டிகளை நடத்தினால்தான் பங்கேற்போம் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதன் காரணமாக, துபாயில் பாகிஸ்தானின் போட்டிகள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னர் ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் இந்தியா விளையாடிய போட்டிகள் மட்டும் துபாய் நடத்தப்பட்டன.