Paristamil Navigation Paristamil advert login

நூறு நாட்களில் கிரேப்ஸ்! - 'பிரெஞ்சு 'வைன்'னின் பின்னணி!!

நூறு நாட்களில் கிரேப்ஸ்! - 'பிரெஞ்சு 'வைன்'னின் பின்னணி!!

22 புரட்டாசி 2016 வியாழன் 10:30 | பார்வைகள் : 18041


பிரான்சுக்கு பெருமை சேர்க்கும் பட்டியலில் 'பிரெஞ்சு வைன்'க்கும் கட்டாய இடம் உண்டு... பெருமையோடு மட்டுமில்லாமல் பெரிய அளவு வருவாயையும் கொண்டுவருகிறது. அப்படிப்பட்ட பிரெஞ்சு வைன்.... கிரேப்சில் செய்யப்படுகிறது... என்றால்.. "அது எங்களுக்கு தெரியாதா?" என்பீர்கள்... அதனால்... தெரியாத தகவல் ஒன்று சொல்கிறோம்... 
 
வைனுக்காக வளர்க்கப்படும் கிரேப்ஸ், அறுவடை செய்வதற்கு 100 நாட்கள் எடுத்துக்கொள்கின்றனவாம். பூக்கள் பூக்க தொடங்கிய நாளில் இருந்து சரியாக 100 வது நாள் அறுவடைகள் ஆரம்பித்து விடுகிறதாம். அறுவடை நாட்களில் பலருக்கு வேலை வாய்ப்புகள் தேடி வருமாம். 
 
மீதி வேலைகள் அனைத்தும் 'இயந்திரங்கள்' மூலம் செய்யப்பட்டாலும்...  அறுவடை மனித வளத்தால் மட்டுமே சாத்தியம்! ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு நபர் 1000 கிலோ (1 தொன்) வரை பறிக்கவேண்டுமாம். (ஐய்யயோ... என 'ஷாக்' ஆகாதீர்கள்... தொங்கும் கிரேப்ஸ்களில் ஒரு கொத்தை பறித்தாலே 4 தொடக்கம் 5 கிலோ வந்துவிடும்!!) அறுவடை நாட்களில் கல்லூரி மாணவர்கள்... வேறு தொழில் செய்பவர்கள் அனைவரும் இங்கு வந்து கிரேப்ஸ் பறித்து கொடுப்பார்கள். இப்படியாக 8 தொடக்கம் 15 நாட்களில் மொத்த அறுவடையும் முடித்து விடுவார்கள்!! 
 
நூறு நாட்களில் விளைந்த கிரேப்ஸ்களை ஆறு நாட்களில் பறித்து... நூறு வருடங்கள் புதைத்து வைத்தால்... அதுவே சிறந்த வைன்!!! அடடே!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்