10G இணைய சேவையை அறிமுகப்படுத்திய சீனா

20 சித்திரை 2025 ஞாயிறு 18:32 | பார்வைகள் : 179
ஒரு சில நிமிடங்கள் இணைய சேவை தடைபட்டாலே வேலைகள் அனைத்தும் நின்று போகும் அளவுக்கு, இணையம் உலகை ஆக்கிரமித்துள்ளது.
இணைய பயன்பாட்டை பொறுத்தவரை, அதன் வேகம் முக்கியமான ஒன்று. 2G யில் தொடங்கிய இணைய சேவை, 3G, 4G என அதிகரித்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனா தற்போது 10G இணைய சேவையை அறிமுகப்படுத்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஹூவாய் (Huawei) நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு அருகே உள்ள சியோங்கான் நியூ என்ற பகுதியில், உலகின் முதல் 10G இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த 10G இணைய சேவையில், பதிவிறக்க வேகம் 9834 Mbps, பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வளர்ச்சி சீனாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக உள்ளதோடு, அதிவேக இணைய இணைப்பில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.