பிரான்சில் புதிய வசதிகள் கொண்ட தொருந்து!!
19 புரட்டாசி 2016 திங்கள் 12:49 | பார்வைகள் : 18669
அட்டகாசமான வசதிகளுடன் புதிய தொடருந்துகள் பிரான்சுக்கு அறிமுகமாக இருக்கிறது. Alstom நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய வகை தொடருந்து நிச்சயம் உங்களுக்கு மிக இனிமையான பயண அனுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை.
ஒரு மணிநேரத்துக்கு 320 கிலோமீட்டர்கள் பயணிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம் இந்த தொடருந்துகள். 556 இருக்கைகள் கொண்ட தொடருந்தாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது தற்போதிருக்கும் TGVs'ஐ விட 22 வீதத்தால் அதிகமாகும். முதல் வகுப்பில் 158 பேர்வரை அமர்ந்து செல்லலாம். உங்கள் தலை வரை இருக்கும்படி மிக மென்மையான இருக்கைகள் கொண்டுள்ளது. Alstom நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த தொடருந்துக்களின் மொத்த 'பட்ஜெட்' 1.2 பில்லியன் யூரோக்கள் ஆகும்.
மேலும், குழு பயணத்துக்கு ஏற்றது போல் வட்டவடிவிலான இருக்கைகளைகளை கொண்டுள்ளது. மேலும் மிக தாராளமான இடவசதிகளையும் கொண்டுள்ளது. உங்கள் உடைமைகளை அதற்கென ஒதுக்கிய இடத்தில் வைத்துவிட்டு நீங்கள் உள்ளே சின்னதாக 'கோல்ஃப்' விளையாடலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!!
இவை அத்தனையும் விட, நீங்கள் பயணம் செய்துகொண்டிருக்கும் இடம், செல்லவேண்டிய தூரம், சென்றடையும் நேரம் என அனைத்து 'அப்டேட்'களும் உங்களுக்கு திரையில் காண்பிக்கப்படும்! ஒவ்வொரு இருக்கைகளுக்கும் தொலைபேசியை 'சார்ஜ்' செய்யும் வசதி கொண்ட் USB போர்ட் இருக்கிறது. கொஞ்சம் நில்லுங்கள்... அட... பயணம் முழுவதற்கும் உங்களுக்கு இலவசமாக அதிவேக wifi கூட கிடைக்குமாம்!!