Paristamil Navigation Paristamil advert login

கூட்டணிக் கட்சிகளின் விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

கூட்டணிக் கட்சிகளின் விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

21 சித்திரை 2025 திங்கள் 06:49 | பார்வைகள் : 125


கூட்டணிக் கட்சிகளின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கிறேன்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

பா.ம.க, தி.மு.க., கூட்டணிக்கு வரும் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க.,வுக்கு சென்று விடும் என்றும் கிசுகிசு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதான் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையிலான பிரச்னை என்றும் தகவல் வெளியாகிறது. இது உண்மையா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின், ''அத்தகைய தகவல்களை பொருட்படுத்த தேவையில்லை. தி.மு.க., கூட்டணி உறுதியாக உள்ளது'' என்று பதிலளித்தார்.

துணை முதல்வராக உதயநிதியின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள் என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின், ''துணை முதல்வர் எனக்கு உதவியாக இருக்கிறார். அதே நேரத்தில், தமிழக மக்களுக்கு துணையாக இருந்து சேவை செய்து அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்'' என்று பதிலளித்தார்.

மேலும் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: இந்த அரசு, கூட்டணி கட்சிகளின் ஆலோசனைகள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை கருத்தில் கொண்டு, அவர்களது ஒத்துழைப்புடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு எப்போதும் மதிப்பளிக்கிறேன்.

மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கவர்னர் என்பவர் தபால்காரர்தான். தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பும் இதைத் தான் கூறியிருக்கிறது. ஆட்சியை பிடிக்க விரும்பிய அ.தி.மு.க., தலைவர்கள், பா.ஜ.,வின் விருப்பப்படி தமிழகத்தின் மீது நீட் தேர்வை திணித்தனர். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு நடத்தப்படவில்லை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்