Paristamil Navigation Paristamil advert login

மெக்.டொனால்ட் உணவகத்தின் புதியமுயற்சி கைகொடுக்குமா??

மெக்.டொனால்ட் உணவகத்தின் புதியமுயற்சி கைகொடுக்குமா??

18 புரட்டாசி 2016 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 17974


உலகின் மிகப்பெரிய உணவு நிறுவனமான மெக்.டொனால்ட் பரிசில் புதிய முயற்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளது. உண்மையில் பிரான்சில் தான் இது புது முயற்சி... ஏனைய நாடுகளில் எல்லாம் இது எப்போவோ ஆரம்பித்தாயிற்று! சரி... சஸ்பென்சை உடைத்துக்கொண்டு நேரே விஷயத்துக்கு வருவோம். 
 
மெ.டொனால்ட் உணவகத்தின் மற்றொரு பிரிவு தான் மெக்.கஃபே!! (Mc.Cafe) இந்த மெக்.கஃபேயில் பர்கர் கிடைக்காது, மாறாக காஃபி, சூப், சண்ட்விச் போன்றவை தான் கிடைக்கும். முக்கியமாக கஃபே!! இந்த உணவகம் உலகம் முழுவதும் மகா பிரபலம். மணிக்கணக்கில் இருந்து உரையாடிக்கொண்டு... அரட்டையடித்துக்கொண்டு கஃபே அருந்துபவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த McCafe பிரான்சுக்கு முதல் தடவை வருகிறது.
 
ஆனால், இது ஏலவே ஒரு தடவை ஆரம்பிக்கப்பட்டு தோல்வியில் முடிந்த வரலாறும் உண்டு. 2010 ஆம் ஆண்டு La Défense பகுதியில் இந்த புதிய முயற்சி ஆரம்பிக்கப்பட்டு, ஒரே வருடத்தில் மூடுவிழா கண்டது. அதன் பின்னர் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் கோதாவில் இறங்கியுள்ளது.
 
காலை 7.30இல் ஆரம்பித்து இரவு 11 மணிவரை திறந்திருக்கும் இந்த McCafe, வழக்கம் போல் 30 இருக்கைகளை கொண்ட McDo உணவகம் போல் தான் இருக்குமாம்.  வா வாத்தியாரே!!