ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன்

21 சித்திரை 2025 திங்கள் 10:28 | பார்வைகள் : 141
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் ஒரு போட்டியில் கூட சில வீரர்கள் குறித்து இங்கே காண்போம்.
ஐபிஎல் 2025 தொடரில் இதுவரை 38 போட்டிகள் முடிந்துவிட்டன. ஆனாலும் சில வீரர்கள் இன்னும் களத்தில் இறக்கப்படவில்லை.
அதிலும் குறிப்பாக கோடிக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
மயங்க் யாதவ்: வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் (Mayank Yadav) LSG அணியால் ரூ.11 கோடிக்கு வாங்கப்பட்டார்.
இதுவரை 4 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
தங்கராசு நடராஜன்: தமிழக வீரரான தங்கராசு நடராஜனை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரூ.10.75 கோடிக்கு வாங்கியது.
61 ஐபிஎல் போட்டிகளில் 67 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள தங்கராசு நடராஜன் (Thangarasu Natarajan) நடப்பு தொடரில் இன்னும் விளையாடவில்லை.
ஜேக்கப் பெத்தேல்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேக்கப் பெத்தேல் (Jacob Bethel) ரூ.2.6 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார்.
இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத ஜேக்கப் பெத்தேல், சர்வதேச டி20யில் 10 போட்டிகளில் 196 ஓட்டங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெரால்ட் கோட்ஸி: குஜராத் டைட்டன்ஸ் அணி தென்னாப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்ஸியை (Gerlad Coetzee) ரூ.2.4 கோடிக்கு வாங்கியது. இவர் இதுவரை 10 ஐபிஎல் போட்டிகளில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
குர்ஜப்னீத் சிங்: இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த குர்ஜப்னீத் சிங் (Gurjapneet Singh) உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.2.2 கோடிக்கு இவரை வாங்கியது. ஆனால் இவர் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
ரஹ்மனுல்லா குர்பாஸ்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆப்கானின் அதிரடி வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸை (Rahmanullah Gurbaz) ரூ.2 கோடிக்கு வாங்கியது. இவர் 13 ஐபிஎல் போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 289 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.