'ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பிரான்ஸ்!!'
17 புரட்டாசி 2016 சனி 10:30 | பார்வைகள் : 17928
மேலே தலைப்பை படித்ததும், ஏதேனும் 'குஜால்' மேட்டர் என நினைக்காதீர்கள்! உண்மையில் இது ஒரு சோக செய்தி! நேற்று வெள்ளிக்கிழமை, 'உலக வானிலை ஆராய்ச்சி மையம்' என்ன தெரிவித்திருக்கிறது என்றால்... '2016 ஆம் ஆண்டின் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதம் தான் வரலாறு காணாத அதிகளவு வெப்பம் வீசிய மாதமாகும்!' என ஸ்டேட்மெண்ட் வெளியிட்டிருக்கிறது. இருக்கட்டும்... அது உலக நடப்பு... நம் பிரான்சும் அதே வெள்ளிக்கிழமை ஒரு ஸ்டேட்மெண்ட் வெளியிட்டுள்ளது. அதில்... 'இந்த 2016 ஆம் ஆண்டு கோடை தான் அதிகளவில் தீச்சம்பவம் இடம்பெற்ற ஆண்டாகும்!' என தெரிவித்திருக்கிறது. என்ன ஒரு ரெக்கோர்ட்??
பிரான்சில் இந்த கோடையில் 4,800 ஹெக்டேயர்கள் எரிந்து சாம்பல் மேடாகிப்போனது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படை வீரர்கள் உயிரை பணயம் வைத்து போராடி கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். அதன் போது பலர் தீக்காயங்ககுக்கும் உள்ளாகினர். 'கடந்த 90 ஆம் ஆண்டில் இருந்து இதுபோல் ஒரு தீயை பார்த்ததில்லை!' என மூத்த தீயணைப்பு படை வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தெய்வாதீனமாக தீயின் போது யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீயணைப்பு படை வீரர்கள் படும் கஷ்ட்டத்தை எங்களுக்காக வீதியில் 'டெமோ' செய்து காட்டும் போது... நாம் சிலவேளை அதை கடந்து செல்வதுண்டு... ஆனால் அவர்கள் தான் நிஜ ஹீரோக்கள் என்பது அப்பட்டமான உண்மை!