Paristamil Navigation Paristamil advert login

மேற்கு கடற்கரைக்கு ஒரு பயணம்!!

மேற்கு கடற்கரைக்கு ஒரு பயணம்!!

16 புரட்டாசி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18728


பிரெஞ்சு மாவட்டங்கள் ஒவ்வொன்றும் பல அசாத்திய தனித்தன்மைகள் கொண்டுள்ளது. பிரான்சின் மேற்கின் எல்லையில் 'அழகோ அழகு' என அமைதியாக ஆர்ப்பரிக்கிறது Finistère கடற்கரை மாவட்டம். 
 
பல தனித்தீவுகளும், பல புராதன கட்டிடங்களையும் கொண்டுள்ள இந்த மாவட்டம் பிரான்சின் மேற்கு எல்லையில் உள்ளது.  பெரிதாக வளர்ந்து உயர்ந்த மலைகள் கடலின் நடுவே ஆங்காங்கே நிற்பதைக்காணவே பல சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்களாம். மேலும் உங்களை கடலுக்கு அடியில் அழைத்துச்செல்ல சுற்றுலாத்துறையினர் காத்திருக்கிறார்கள். அங்கே நீங்கள் கண்ணாடி வழியாக பல வித மீன்களையும் டொல்ஃபின்களை தரிசிக்கலாம். Centre Historique de Locronan என்றழைக்கப்படும் மிக புராதன கட்டிடமும் (கற்களால் கட்டப்பட்டது), Pointe Saint Mathieu என அழைக்கப்படும் மலையில் உள்ள ஒரு தேவாலயும் உங்கள் பார்வைக்கு உள்ளது. இரண்டுமே வெவ்வேறு அனுபவங்களை தரவல்லது.
 
இதே நகரத்தில் நீங்கள் Le Fonds Helene et Edouard Leclerc pour la Culture ஐயும் பார்வையிடவேண்டும். மிக அழகான கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த புராத பொருட்கள் நிச்சயம் உங்களை சிலிர்க்க வைக்கும். மேலும் சுற்றுலாப்பயணிகளை கவரும் பொருட்டு ஏராளமான விஷயங்களை பார்த்து பார்த்து இயற்கையோடு இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். 
 
வாழ்நாளில் ஒருதடவையேனும் Finistère நகருக்கு 'விசிட்' அடிக்கவேண்டும்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்