வாடகை சைக்கிள் சேவையால் இவ்வளவு வருமானமா?!
15 புரட்டாசி 2016 வியாழன் 10:30 | பார்வைகள் : 18522
நீங்கள் பரிஸ் நகர வாசி என்றால், உங்களுக்கு Velib எனும் பெயர் நிச்சயம் பரீட்சயமாக இருக்கும். 'வாடகை சைக்கிள்' இவ்வளவு தான் கான்சப்ட்! 'நானெல்லாம் ரெகுலர் கஸ்டமர் ஆக்கும்!' என நீங்கள் சொல்கிறீர்களா... இதோ இதையும் தெரிந்துகொள்ளுங்கள்... Velib வாடகை சைக்கிளால் பரிஸ் நகரத்துக்கு வருடத்துக்கு 15 மில்லியன் யூரோக்கள் வருவாய் கொட்டோ கொண்ட்டென்று கொட்டுகிறதாம்!
எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கடந்த 2013 ஆம் ஆண்டு 16 மில்லியன் வருவாயை கடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருடத்துக்கு 15 மில்லியனுக்கு குறையாமல் வருவாய் இருக்கிறதாம். JCDecaux நிறுவனம் தான் தற்போது சைக்கிள்களை வழங்குகிறது. 2017 ஆம் ஆண்டில் இது பிறிதொரு நிறுவனத்துக்கு மாற்றப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மகிழுந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு முழுதாக முழுக்கு போட்டு, துவிச்சக்கர வண்டியை நாடினால் எல்லாவற்றுக்கும் நல்லது போல்!! அட தொப்பை குறையும் பாஸ்...!!