பிரெஞ்சில் அதிகம் பயன்படுத்தும் எழுத்து எது?
14 புரட்டாசி 2016 புதன் 10:00 | பார்வைகள் : 19202
பிரெஞ்சு மொழி எத்தனை இனிமையானதோ... அத்தனை புதுமையும் ஆனது. பிரெஞ்சு மொழி குறித்து ஏலவே பல புதுமையான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்திருந்தோம்... சரி, இன்று பிரெஞ்சு மொழியில் அதிகம் பயன்படுத்தும் எழுத்து எது என பார்க்கலாம்.
பிரெஞ்சில் அதிகம் பயன் படுத்தப்படும் எழுத்து 'e' ஆகும். e எனும் எழுத்து கிட்டத்தட்ட பிரெஞ்சு மொழியை ஆக்கிரமித்து வைத்துள்ளது என சொல்லலாம். அதாவது பிரெஞ்சு மொழியில் 14.7 வீதம் e எழுத்து பயன்படுத்தப்படுகிறது. எங்கெங்கு தேடினாலும் e எழுத்து இருக்கும். அதை விட créée, agréée, dégréée என தொடர்ச்சியான e எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகள் பிரெஞ்சில் உள்ளன.
இரண்டாவது இடத்தில் இருப்பது 's'. 7.9 வீதமான ஆக்கிரமிப்பை கொண்டுள்ளது s.
மிக குறைந்த அளவு பயன்படுத்தப்படும் எழுத்து எது தெரியுமா? ' ï' ஆகும். 0.005 வீதமான வார்த்தைகளில் தான் ï உள்ளது.
மற்றுமொரு ஒற்றுமை தெரியுமா? ஆங்கிலத்தில் கூட e தான் அதிகமாக பயன்படுத்தப்படும் எழுத்து ஆகும். ஆனால் ஆங்கிலத்தில் 12.7 வீதம் தான் ஆக்கிரமிப்பை கொண்டுள்ளது.