அடுத்த போப்பாண்டவர் பிரான்சில் இருந்தா?

21 சித்திரை 2025 திங்கள் 20:03 | பார்வைகள் : 627
போப்பாண்டவர் பிரோன்சுவாவின் மரணத்தை அடுத்து அடுத்த போப்பாண்டவரின் தெரிவு நnடைபெறும்.
இதற்காகப் பலரின் தெரிவுகள் ஆராயப்படும். இந்தத் தெரிவுப் பட்டியலில் பிரான்சில் இருந்து காடினல்; ஜோன்-மார்க் அவெலின் (துநுயுN-ஆயுசுஊ யுஏநுடுஐNநு) பெயரும் இணைக்கபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டிலிருந்து மார்செய் நகரின் பேராயராக இருந்த ஜோன்-மார்க் அவெலின் 2022 இலிருந்து கார்டினலாக மாற்றப்பட்டார்.
papabili எனப்படும் இரட்டை அமைப்புகளில் அடுத்த போப்பாண்டவராகத் தகுதியுள்ள பிசெப்களின் பட்டியலில் ஜோன்-மார்க் அவெலின் உள்ளமை குறிப்பிடத்தக்கது.