Paristamil Navigation Paristamil advert login

அன்-இதால்கோவின் அடுத்த இலக்கு அகதிகள் விவகாரம்!!!

அன்-இதால்கோவின் அடுத்த இலக்கு அகதிகள் விவகாரம்!!!

21 சித்திரை 2025 திங்கள் 21:22 | பார்வைகள் : 521


பரிசின் நகரபிதா அன் இதால்கோ அடுத்த நகரப்பிதா தேர்தலில் நிற்கப்போவதில்லை என முடிவெடுத்துள்ளார்.

அடுத்த தேர்தலில் பங்கெடுக்காவிட்டால் தற்போதுள்ள நகரபிதா பதவியிலிருந்து இவர் 2026 வசந்தகாலத்தோடு வெளியேற வேண்டும்.

ஆனால் அதற்கு முன்னரே இவர் ஒரு சர்வதேசத் திட்டத்தினை வைத்துள்ளார். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையராக (UNHCR - Haut-Commissariat des Nations unies pour les réfugiés) இயங்ககத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2024 ஒலிம்பிக் போட்டிகளின் போது இவரிற்கு  ஜனாதிபதி எமபனுவல் மக்ரோனுடன் சுமுகமான உறவு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி இவரது ஆவணங்கனை தனது இராஜதந்திர உறவின் மூலம் மிகவும் உயர்நத மட்டத்தில் சிபாரிசு செய்வதாக, அவரின் நெருங்கிய இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் சான்றளித்துள்ளன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்