Paristamil Navigation Paristamil advert login

காவல்துறை அதிகாரிகளை போட்டோ எடுத்தால் - சிறை!!

காவல்துறை அதிகாரிகளை போட்டோ எடுத்தால் - சிறை!!

12 புரட்டாசி 2016 திங்கள் 14:48 | பார்வைகள் : 18883


நிஜமாவா? என கேட்டால்... அப்படித்தான் பிரெஞ்சு சட்டம் சொல்கிறது. பிரான்சில் எத்தனையோ 'ஏன் - எதுக்கு?' என தெரியாத சட்டங்கள் எல்லாம் 'லோ அண்ட் ஓடர்ஸ்' இல் இருக்கிறது. அதெல்லாம் நடைமுறையில் இருக்கிறதா என கேட்டால்... பதில் இல்லை என்பதுதான்! 
 
பெண்கள் ஜீன்ஸ் அணிய கூட ஒரு காலத்தில் பிரான்சில் தடை இருந்திருக்கிறது... இது குறித்து முன்னர் பிரெஞ்சு புதினத்தில் தெரிவித்திருந்தோம்... ஆனால் இன்று பெண்கள் ஜீன்சை தவிர வேறொன்றை அணிவதை காணோம்! அதை விட்டுவிடலாம்... நாம் இந்த போட்டோ மேட்டருக்கு வரலாம்!! 
 
வீதியில் நிற்கும் காவல்துறை அதிகாரிகளை புகைப்படம் எடுக்கவோ...அவர்களின் வாகனத்தை புகைப்படம் எடுக்கவோ தடை என சட்டம் இருக்கிறது. மீறி எடுத்தால் கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவீர்கள்... சிலவேளை சிறைத்தண்டனை கூட கிடைக்கலாம்!! அவதானம்... காவல் துறை அதிகாரிகளை முதுகுக்கு பின்னால் கூட போட்டோ எடுக்கக்கூடாது என சொல்கிறது சட்டம்!! 
 
ஆனால்... இது ஒரு தூசி படிந்த பழைய அம்பாசிட்டர் காலத்து சட்டம்! இப்போதும் இது நடைமுறையில் இருக்கிறதா என கேட்டால் 'நஹி பேட்டா' என்பது தான் பதில்!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்