பரிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்து! தீவிர விசாரனை...

22 சித்திரை 2025 செவ்வாய் 04:32 | பார்வைகள் : 405
பரிஸின் 16வது மாவட்டத்தில் உள்ள Eugène-Manuel தெருவிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது.
ஸ்டூடியோவின் ஜன்னல் வழியாக தீ பரவிய நிலையில், உள்ளே யாரும் இல்லாதது பேரழிவைத் தவிர்த்தது.
பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், தீவிபத்துக்கு முன்னர் ஒரு நபர் லைற்ரர் கொண்டு துணியை எரிக்க முயற்சிக்கும்போது பார்த்ததாகவும், அவரே தீயணைப்புப் படையை அழைத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் சிறியதாக இருந்தாலும், காவல் துறையினர் தீ வைத்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை 1வது குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் கடந்த ஆண்டும் வாகனங்களை எரித்த சம்பவம் நடைபெற்றிருந்த நிலையில், தற்போதைய சம்பவம் அதனுடன் தொடர்பில்லை என உறுதி செய்யப்படுகிறது.
இது ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட நபரின் செயலா? அல்லது ஒருவரை குறிவைத்த குற்றமா என்பது விசாரணையின் முக்கிய அம்சமாக உள்ளது.