Réunion தீவைச் சென்றடைந்தார் ஜனாதிபதி மக்ரோன்!!

22 சித்திரை 2025 செவ்வாய் 05:57 | பார்வைகள் : 329
இந்தியப் பெருங்கடலுக்கான தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில் Réunion தீவுக்குச் சென்றடைந்துள்ளார் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்.
சிக்கன்குனியா காய்ச்சலால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள Réunion மக்களைச் சந்திப்பதற்காக இன்று ஏப்ரல் 22 ஆம் திகதி அவர் அங்கு சென்றுள்ளார். நேற்று நாள் முழுவதும் Mayotte தீவினைச் சுற்றுப்பார்த்து புயலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உரையாடியிருந்தார்.
அதை அடுத்து, அவரது விமானத்தில் ஜனாதிபதி மக்ரோன் மற்றும் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆகிய இருவரும் Réunion தீவினை இன்று அதிகாலை (பரிஸ் நேரம்) சென்றடைந்துள்ளனர்.
ஜனாதிபதி தம்பதியினர் தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டங்களுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.