Paristamil Navigation Paristamil advert login

பேருந்து நிறுத்தத்தில் மோதிய கார் : மூதாட்டி உயிரிழப்பு! சாரதி தப்பி ஓட்டம்!!

பேருந்து நிறுத்தத்தில் மோதிய கார் : மூதாட்டி உயிரிழப்பு! சாரதி தப்பி ஓட்டம்!!

22 சித்திரை 2025 செவ்வாய் 06:50 | பார்வைகள் : 5145


Arcueil (Val-de-Marne) பகுதியில் ஏப்ரல் 21 திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற சோகமான விபத்தில், Daphia என்ற 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். RER-B ரயில் நிலையம் அருகே, Avenue de Laplaceஇல் வெள்ளை நிற Renault Kangoo கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அவரை மோதி தாக்கியது.

இந்தக் கொடூரச் சம்பவம் அருகிலுள்ளோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண் சாலை ஓரத்தில் நின்றிருந்தபோது கார் நேராக நுழைந்து, அவரது கால்களை நசுக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடனடியாக காரை எடுத்து தப்பிச் சென்றுள்ளார். காவல் துறையினர் இவ்விபத்தை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திலேயே டாபியா உயிரிழந்தார்.சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் எடுத்த காரின் பதிவெண் புகைப்படத்தின் அடிப்படையில், தப்பிச் சென்ற சாரதியை காவல் துறையினர் தேடி வருகிறார்கள். Créteil நீதிமன்றம், “தற்செயலான கொலை மற்றும் தப்பிச் செல்லல்” என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்