இறந்தவர்களை திருமணம் செய்துகொள்ளலாம்!
10 புரட்டாசி 2016 சனி 10:00 | பார்வைகள் : 18943
தலைப்பை படித்ததும் 'டென்ஷன்' ஆகிவிடாதீர்கள்! இருக்கிறது... பிரான்சில் அப்படி ஒரு வசதி இருக்கிறது. நீங்கள் ஒருவரை திருமணம் செய்துகொள்கிறீர்கள் என்றால்.. உங்கள் துணை உயிருடன் இருக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை என பிரெஞ்சு சட்டம் சொல்கிறது.
பிரான்சின் posthumous marriage என அழைக்கப்படும் இந்த திருமணம் பலமுறை நடந்துள்ளது. உங்கள் காதலன்/ காதலி உயிருடன் இருக்கும் போது உங்களை திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்துடன் இருந்தார் என்பதை நீங்கள் உறுதிப்படுத்தினால் போதும்.
இத்திருமணத்துக்கும் நீங்கள் எல்லா திருமணம் போல் விருந்து, இடம்.. உடை எல்லாம் அணிய வேண்டும். உங்கள் உறவினர்கள் வரவேண்டும்... அவர்கள் முன் திருமணம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவேண்டும்.. முக்கியமாக ஜனாதிபதி இத்திருமணத்தை அனுமதித்து கையெழுத்து இடவேண்டும்... என்றெல்லாம் சட்டங்கள் இருக்கின்றன.
ஆனால் அவர்/ அவள் தான் உயிருடன் இல்லையே??! என நீங்கள் கேட்டால்... அது உங்கள் பிரச்சனை என்கிறது சட்டம்!