Paristamil Navigation Paristamil advert login

பேஸ்புக்கினால் வந்த சட்டச்சிக்கல்!

பேஸ்புக்கினால் வந்த சட்டச்சிக்கல்!

9 புரட்டாசி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18906


கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.. ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆகனும்..!! ஃபேஸ்புக்கில் உள்ள ஒரு பக்கத்தினால் ('பேஜ்') பெரும் குழப்பம் ஒன்றும் சட்டச்சிக்கல் ஒன்றும் வந்துவிட்டது. 
 
Aveyron நகரம் அது. அங்கு வசிக்கும் 14 இளைஞர்கள் சேர்ந்து ஒரு 'சமூக சேவை' செய்கின்றனர். அந்த சமூக சேவையினால் அப்பிரதேச காவல்துறையினரும்... அரசும் பெரும் குழப்பத்துக்கு வந்துவிட்டது. அப்படியென்ன சமூக சேவை?? குறிப்பிட்ட இந்த 14 பேரும் சேர்ந்து, பேஸ்புக்கில் ஒரு பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். பக்கத்தின் பெயர், 'Aveyron நகரத்தில் காவல்துறையினர் எங்கு காவலில் இருக்கிறார்கள் என தெரிவிக்கும் சங்கம்!' (The Group That Tells You Where The Police Are in Aveyron) என்பதாகும்.  அதாவது மிக ஆக்டிவாக இயங்கும் இந்த பக்கத்தில், Aveyron நகரத்தில் எங்கெல்லாம் உங்களை வளைத்து பிடிக்க காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டிருக்கிறார்களோ... அதையெல்லாம் உடனுக்குடன் அப்பக்கத்தில் பகிர்கிறார்களாம். மேலும்... கண்காணிப்பு கமராக்கள் எங்கெல்லாம் பொருத்தப்பட்டிருக்கின்றன என்ற தகவலும் அப்டேட் செய்கிறார்களாம்.
 
'இதென்னடா வம்பாயிற்று??!!' என காவல்துறையினர்.. அப்பக்கத்தின் 14 அட்மின்களையும் வளைத்து பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த... 'இதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை!' என நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதாம். 
 
அதிவேகமாக செல்லும் வாகனத்தை கண்காணிப்பு கமரா பதிவுசெய்தால், அது 1,500 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்படும் குற்றமாகும். இப்பிடி 'போட்டுக்'கொடுத்தால் வருமானம் என்னாகும்.. என்னாகும்... என யோசனையில் இருக்கிறதாம் அரசு!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்