லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

22 சித்திரை 2025 செவ்வாய் 15:16 | பார்வைகள் : 2295
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திடீரென "இன்னும் சில காலத்திற்கு சமூக வலைதளத்திற்கு வர மாட்டேன்" என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், "மாநகரம்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு, கார்த்தி நடித்த "கைதி", விஜய் நடித்த "மாஸ்டர்", கமல்ஹாசன் நடித்த "விக்ரம்", விஜய் நடித்த "லியோ" உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் "கூலி" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்த கட்டமாக தற்போது தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி "கூலி" திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், விரைவில் ப்ரமோஷன் பணிகளும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், "சில காலம் நான் அனைத்து விதமான சமூக வலைதளங்களிலிருந்தும் பிரேக் எடுக்க போகிறேன். கூலி ப்ரமோஷன் வரை இனி சமூக வலைதளத்திற்கு வரமாட்டேன்" என தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவு சரியானது என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1