Paristamil Navigation Paristamil advert login

கண் கலங்க வைத்த புகைப்படம்!

கண் கலங்க வைத்த புகைப்படம்!

8 புரட்டாசி 2016 வியாழன் 12:49 | பார்வைகள் : 19750


வரலாற்றுப் பக்கங்களை நினைவுகூர்ந்தால் பல கண்ணீர் கதைகளை கடந்து வந்திருப்போம் நாம்! இங்கு புகைப்பட கலைஞர் Jacques Gourmelen இனால், 1972இல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பாருங்கள்! 
 
பிரான்சின் Brittany நகரம் அது. 1972 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 6ம் திகதி... Saint-Brieuc பகுதியில் தொழிலாளர் ஆர்பாட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆர்பாட்டக்காரர்களை அடக்கும் முயற்சியில் Riot காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆர்ப்பாட்டத்தை முன் நகர்த்திச்செல்லும் நபர்... எதிரே காவல்துறை அதிகாரி ஒருவரை நேருக்கு நேர் எதிர்கொள்கிறார். இரு தரப்பும் ஒருவரை ஒருவர் எதிரிகளாக பார்க்கும் அந்த நொடியில்... ஆர்ப்பாட்டத்தை நடத்திய நபர் சட்டன உணர்ந்துகொள்கிறார், எதிரே காவல் உடையில் நிற்பது தன் பால்ய வயது நண்பன் என. இருவரும் தள்ளுப்பட்டுகொண்டிருக்கும் போது.. அந்த தொழிலாளியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. அந்த சம்பவம் புகைப்படமாக பதிவாகிறது.
 
Burmieux தொழிலாளி, Jean-Yvon Antignac காவல்துறை சினேகிதன்... Jacques Gourmelen ஆர்பாட்டத்தை உள்ளூர் பத்திரிகைக்காக பதிவு செய்ய வந்திருந்த புகைப்படக்காரர்! 
 
 'இது இடம்பெற்று 40 வருடங்களுக்கு மேலாகிறது. வாழ்நாளில் மறக்க முடியாத புகைப்படம். இருவரும் பால்ய வயது நண்பர்கள் என தெரிந்துகொள்கிறார்கள். என்னை தாக்கிவிட்டு முன் செல் என காவல்துறை நண்பன் சொல்கிறான். ஆனால் தொழிலாளி நண்பன் ஒரு அடிகூட முன் எடுத்து வைக்கவில்லை!' என கண்ணீருடன் அப்புகைப்படம் குறித்து நினைவு கூர்ந்தார் புகைப்படக்கலைஞர் Jacques Gourmelen.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்