லம்போர்கினி மகிழுந்தை ஜொந்தாமினரிடம் பறிகொடுத்துவிட்டு - நடந்து சென்ற நபர்!!
22 சித்திரை 2025 செவ்வாய் 16:53 | பார்வைகள் : 3099
130 கி.மீ அதிகபட்ச வேகம் உள்ள நெடுஞ்சாலையில் மணிக்கு 201 கி.மீ வேகத்தில் பயணித்த மகிழுந்து ஒன்றை ஜொந்தாமினர் தடுத்து நிறுத்தி, அதனை பறிமுதல் செய்தனர். அதன் சாரதி நடந்து சென்றுள்ளார்.
இச்சம்பவம் ஏப்ரல் 22, இன்று செவ்வாய்க்கிழமை காலை Tilloloy (Hauts-de-France) நகரில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 201 கி.மீ வேகத்தில் பயணித்த சாரதி ஒருவரை ஜொந்தாமினர் தடுத்து நிறுத்தனர். அவர் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, அதிக விலையுள்ள லம்போர்கினி மகிழுந்தினை ஜொந்தாமினரிடம் ஒப்படைத்துவிட்டு, ஓட்டுனர் உரிம பத்திரத்தையும் அவர்களிடம் வழங்கிவிட்டு அங்கிருந்து நடந்து சென்றுள்ளார். இத்தகவலை ஜொந்தாமினர் தங்களது X தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
அவர் மது அருந்தியிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் ஜொந்தாமினர் மகிழுந்தை அவர்களது கனரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் 55,000 ஓட்டுனர் உரிமங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய ஜொந்தாமினர் தெரிவித்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan