டில்லி திரும்பினார் பிரதமர் மோடி: காஷ்மீர் தாக்குதல் குறித்து முக்கிய ஆலோசனை

23 சித்திரை 2025 புதன் 07:10 | பார்வைகள் : 2270
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக, சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அவசரமாக டில்லி திரும்பினார். தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார். நேற்று சென்ற அவர், பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு டில்லி திரும்புவதாக இருந்தது. ஆனால், காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி தனது சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவு சவுதியில் இருந்து கிளம்பினார்.
தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி டில்லி திரும்பினார். டில்லியில்தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1