Paristamil Navigation Paristamil advert login

முதல்வர் ஸ்டாலினுக்கு தேவேந்திர பட்னவிஸ் பதிலடி

முதல்வர் ஸ்டாலினுக்கு தேவேந்திர பட்னவிஸ் பதிலடி

23 சித்திரை 2025 புதன் 10:13 | பார்வைகள் : 165


மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையின் கீழ், மஹாராஷ்டிராவில், 1 - 5ம் வகுப்பு வரை ஹிந்தியை கட்டாயமாக்கி, சமீபத்தில், அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ., கூட்டணி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, 'ஹிந்தி கட்டாயமில்லை' என, முதல்வர் பட்னவிஸ் தெரிவித்து, அரசு உத்தரவை திரும்பப் பெற்றார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், 'ஹிந்தி கட்டாயமில்லை என, மஹா., முதல்வர் பட்னவிஸ் கூறுகிறார். இதை மத்திய அரசு அங்கீகரிக்கிறதா? இது குறித்து பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு பதிலளித்து, மஹா., முதல்வர் பட்னவிஸ் கூறுகையில், 'பிரதமரிடம் இருந்து விளக்கத்தை பெறுவதற்கு முன், தேசிய கல்விக் கொள்கை குறித்து படித்துப் பார்த்து முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். தேசிய கல்விக் கொள்கை எந்த மொழியையும் திணிக்கவில்லை.

'ஆங்கிலத்தைத் தவிர, வேறு இரண்டு இந்திய மொழிகளை மட்டுமே படிக்கச் சொல்கிறது. மஹாராஷ்டிராவை பொறுத்தவரை, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் என, எந்த மொழி வேண்டுமானாலும் மாணவர்கள் படிக்கலாம்.

'முக்கிய கேள்வி என்னவென்றால், நீங்கள் ஏன் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறீர்கள்? மற்றவர்கள், ஹிந்தி படிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை?' என, தெரிவித்து உள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்