Paristamil Navigation Paristamil advert login

கண் பரிசோதகர் மீது 2.4 மில்லியன் யூரோக்கள் மோசடி வழக்கு!!

கண் பரிசோதகர் மீது 2.4 மில்லியன் யூரோக்கள் மோசடி வழக்கு!!

23 சித்திரை 2025 புதன் 03:34 | பார்வைகள் : 779


ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை Evry-Courcouronnes நகரில் உள்ள ஒரு 60 வயதான கண் பரிசோதக நிபுணர் (l’opticien) CPAM மற்றும் பல காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி சுமார் 2.4 மில்லியன் யூரோக்களை மோசடி செய்துள்ளார்.

அவர் போலியான கண் பரிசோதனை அறிக்கைகள் உருவாக்கி, அதன் அடிப்படையில் காப்பீட்டு தொகைகளை திருப்பி பெற்றுள்ளார். மோசடியின் தடயங்களை மறைக்க, பணத்தை வங்கிக் கணக்குகள் மற்றும் கிரிப்டோகரன்சி பினான்ஸ் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.

அவர் காமரூனில் (cameroon) ஒளிந்து இருந்துவிட்டு 2025 ஜனவரியில் பிரான்சிற்கு திரும்பிய போது கைது செய்யப்பட்டார் மற்றும் தற்போது Bois-d'Arcy சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

விசாரணை நடந்து வருகிற நிலையில், சந்தேகநபர் தன்னால் ஏற்பட்ட நஷ்டங்களை திருப்பி செலுத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இந்த மோசடி CPAM மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்