போப் பிரான்சிஸ் மறைவு: தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடாத பிரான்ஸ்? மதச்சார்பற்ற நிலையா?

23 சித்திரை 2025 புதன் 07:02 | பார்வைகள் : 613
போப் பிரான்சிஸ் மறைந்ததையொட்டி, எதிர்வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 26) நாட்டின் அனைத்து அரசு வளாகங்களிலும் தேசியக் கொடிகள் தாழ்த்தி வைக்கப்படும் என வத்திகான் அறிவித்துள்ளது.
அவரது இறுதிச் சடங்குகள் அந்த நாளில் ரோமில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன், தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சுற்றுப்பயணத்தில் இருந்தாலும், போப்பின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அதிபர்களுடன், வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சர்களும் அங்கு பங்கேற்கவுள்ளனர். ஆனால், பிரதமர் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜெண்டினா, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், டிமோர் கிழக்கு உள்ளிட்ட பல நாடுகள் போப் பிரான்சிஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தேசிய துக்கத்தை அறிவித்துள்ளன.
போப்பின் உடல் Sainte-Marthe குடியிருப்பில் வைக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் தரிசனத்திற்காக புனித பீட்டர் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டு, ஒன்பது நாட்கள் வரை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.
2005-ஆம் ஆண்டு போப் ஜான் பால் II மறைந்தபோது, முன்னாள் ஜனாதிபதி ஜாக் ஷிராக் (Jacques Chirac) இதேபோன்று தேசியக் கொடிகளை தாழ்த்தி மரியாதை செலுத்தினார். மேலும் நாட்டின் மதச்சார்பற்ற தன்மை குறித்து நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்துள்ளன.