பாப்பரசர் மறைவு : தேசிய துக்கதினம் அறிவிக்காத பிரான்ஸ்..??!!

23 சித்திரை 2025 புதன் 05:02 | பார்வைகள் : 1138
பரிசுத்த பாப்பரசர் மறைவினை அடுத்து பல்வேறு உலக நாடுகள் தேசிய துக்க தினத்தினை அறிவித்துள்ளன. பல நிகழ்வுகளும் உலகம் முழுவதும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை பிரான்ஸ் எந்த ஒரு துக்க தின அறிவித்தலையும் அறிவிக்கவில்லை.
◉ இத்தாலியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என அறிவித்துள்ளது.
◉ ஸ்பெயினில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறப்பதுடன், பல்வேறு நிகழ்வுகளை இரத்தும் செய்துள்ளது.
◉ போர்துகலில் விழாக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக அதன் ஜனாதிபதி Marcelo Rebelo de Sousa அறிவித்துள்ளார்.
◉ போலந்தில் எந்த ஒரு சத்தமான நிகழ்வுகளுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
◉ அர்ஜண்டினாவில் இடம்பெறும் அனைத்து உதைபந்தாட்ட போட்டிகளும் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
◉ பிரேசிலில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், சிறப்பு வழிபாடுகளும், அஞ்சலி நிகழ்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதுவரை பிரான்ஸ் எந்த ஒரு துக்க நாளையும் அறிவிக்கவில்லை. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.