பரிசுக்குள் இப்படி ஒரு மக்கள் தொகையா??
6 புரட்டாசி 2016 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 19148
அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு சிறிய தீவில் மனிதர்கள் செல்ல தடை விதித்திருக்கிறார்களாம். காரணம் அங்கு ஒரு சதுர மீட்டருக்கு 5 பாம்புகள் வீதம் உள்ளனவாம். எங்கோ படித்ததாக ஞாபகம்... அதை விட்டுவிடலாம்!
பிரான்சில் மொத்தம் 101 'départements' உள்ளது. அதில் 96 மட்டுமே பிரான்சுக்குள் இருக்கிறது. மீதி 5 départementsகளும் எங்கே என்பதற்கு பின்னர் ஒருநாள் பதில் சொல்கிறோம். குறிப்பிட்ட இந்த départementsகளில் அதிக மக்கள் தொகையை கொண்டது Nord ஆகும். 2.6 மில்லியன் மக்களை கொண்டுள்ளது. இரண்டாவது இடத்தில் இருப்பது சிங்கம் 'பரிஸ்' ஆகும்.
2.2 மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ளது பரிஸ். 21,234 மக்களை ஒரு சதுர கிலோமீட்டர்களுக்கு கொண்டுள்ளதாம். அதே போல் பரிஸ் département ஐ, பல ஆண்டுகளாக Seine என்றுதான் அழைத்தார்களாம். பின்னர் தான் அது பரிசாக மாறியது.
இந்த départementsகளை கொண்ட MAP முதன்முறையாக வரையப்பட்டது 1791ஆம் ஆண்டு. அதே போல் 'வடக்கு' பகுதியில் இருக்கும் département ஒன்றுக்கு 'வடக்கு' என்றே பெயரை வைத்துவிட்டார்கள். அதுதான் பிரான்சின் மிகப்பெரிய département 'Nord' ஆகும்!! அட...!!