Paristamil Navigation Paristamil advert login

கொலம்பிய ஜனாதிபதியின் அமெரிக்க விசாவை ரத்து செய்த ட்ரம்ப் நிர்வாகம்

கொலம்பிய ஜனாதிபதியின் அமெரிக்க விசாவை ரத்து செய்த ட்ரம்ப் நிர்வாகம்

23 சித்திரை 2025 புதன் 05:52 | பார்வைகள் : 243


கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் அமெரிக்க விசாவை ட்ரம்ப் நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது அவரை திகைக்க வைத்துள்ளது.

கொலம்பியாவின் முதல் இடதுசாரி ஜனாதிபதியான பெட்ரோ, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தயாரான நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் தனது விசாவை ரத்து செய்ததாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து நிதி அமைச்சர் ஜெர்மன் அவிலா தொடர்புடைய கூட்டங்களில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் சட்டவிரோத புலம்பெயர் மக்களுடன் புறப்பட்ட இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களை தரையிறங்க கொலம்பியா மறுத்துவிட்ட சம்பவம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கோபம் கொள்ள வைத்துள்ளது.

இதனையடுத்து கொலம்பிய அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக தீர்க்கமான பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார். இந்த நிலையிலேயே, கொலம்பிய ஜனாதிபதியின் அமெரிக்க விசாவை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

இதனிடையே திங்களன்று நடந்த அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தின் போது பேசிய ஜனாதிபதி பெட்ரோ, கண்டிப்பாக என விசா தேவை இல்லை, டொனால்ட் டக்கை நான் பல முறை பார்த்திருக்கிறேன், அமெரிக்கா செல்லாத நிலையில், நான் வேறு வேலைகளில் கவனம் செலுத்த இருக்கிறேன் எனவும் பெட்ரோ குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோ முன்பு செப்டம்பர் 2024 ல் சிகாகோவில் நடந்த காலநிலை மாநாட்டிற்காகவும், நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்காகவும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தார்.

கொலம்பிய மக்கள் 160 பேர்களை கை, கால்களில் விலங்கிட்டு ட்ரம்ப் நிர்வாகம் அனுப்பி வைத்ததை கடுமையாக கண்டித்த ஜனாதிபதி பெட்ரோ, இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களை தரையிறங்கவும் அனுமதி மறுத்தார்.

பதிலுக்கு 25 சதவீர வரி விதிப்பதாக மிரட்டல் விடுத்த ஜனாதிபதி ட்ரம்ப், அதை 50 சதவீதமாக அதிகரிக்க இருப்பதாகவும் அச்சுறுத்தினார்.

இறுதியில், ட்ரம்பின் நிபந்தனைகளுக்கு உட்படுவதாக ஒப்புக்கொண்டதுடன், புலம்பெயர் மக்களை ஏற்றுக்கொள்ளவும் சம்மதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்