ஏலத்துக்கு வந்த 170 வருடங்கள் பழமையான 'வைன்!'
5 புரட்டாசி 2016 திங்கள் 10:30 | பார்வைகள் : 18577
பிரெஞ்சு 'வைன்'க்கு இருக்கும் மவுசு பற்றி நீங்கள் அறிந்ததுதான்..!! அப்படிப்பட்ட பிரெஞ்சு வைன் ஏலத்துக்கு வந்தது. எங்கு? சீனாவின் ஹாங்காங் நகரில்!
மொத்தமாக 2000 போத்தல்கள் ஏலத்துக்கு விடப்பட்டிருந்தது. அதில் ஒரே போத்தல் மாத்திரம் 1846ஆம் வருடம் தயாரிக்கப்பட்ட வைன் ஆகும்! அதாவது 170 வருடங்கள் பழமையானது. Meursault-Charmes இல் தயாரிக்கப்பட்ட அந்த 'விண்டேஜ்' வைனானது 134,750 ஹாங்காங் டொலர்களுக்கு விறனையானது. நம்மூர் காசுக்கு கிட்டத்தட்ட 15,000 யூரோக்கள்!! அம்மாடியோவ்!!
அதை தவிர்த்து மேலும் 16 போத்தல்கள் வைன் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்! வருடா வருடம் இடம்பெறும் ஏலத்தில்... இம்முறை மிகப்பெரிய 'ஹிட்' அடித்துள்ளதாக ஏலத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், 60,000 ஹாங்காங் டொலர்கள் ஆரம்ப விலையாக கூறப்பட்ட 1865 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வைன் போத்தல் ஒன்று, 196,000 ஹாங்காங் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரத்தில் இடம்பெற்ற இந்த ஏலம், 'பிரெஞ்சு வைனின் பெருமையை பறை சாற்றுகிறது இது' என ஏகபோக உற்சாகத்தில் இருக்கிறார்களாம் வைன் உற்பத்தியாளர்கள்.