யூத எதிர்ப்புத் தாக்குதல் - 16 வயதுடையவன் நீதிமன்றத்தில்!

23 சித்திரை 2025 புதன் 12:39 | பார்வைகள் : 567
கடந்த மார்ச் 22ம் திகதி யூதக் கோவிலிற்குச் சென்று வந்த ஒரு யூத மதகுரு மீது தாக்குதல் நடந்த செய்தி ஏற்கனவே பதிவிட்டிருந்தோம்.
இந்த மதகுரு தனது 9 வயது மகனுடன் வந்த போது, அவரைத் தாக்கி, அவர் மீது உமிழ்நீர் துப்பி, அவரின் தோற்பட்டையில் கடித்தும் ஒரு பதினாறு வயதுடையவன் தாக்குதல் நடாத்தி உள்ளான்.
அதை மற்றைய இளைஞன் செல்பேசியில் காணொளிப்பதிவும் செய்துள்ளான்.
ஏற்கனவே இந்த 16 வயதுடைய மாணவனிற்கு கல்வித் திணைக்களத்தினால் தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் காவற்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இன்று ஓர்லியோன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, தாக்குதல் நடாத்தியவன் மீது போதைப்பொருள் குற்றம், ஆயுதமுனையில் திருட்டு எனப் பல குற்றங்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஒரு சிறுவன் முன்னிலையில் வன்முறையுடன் தாக்கியதுடன் அச்சிறுவனிற்கு மன உளைச்சலையும் ஏற்படுத்திய குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
காவற்துறையினரின் காவலில் தான் பலஸ்தீனப்பிரஜை என்று கூறியிருந்துள்ளான். ஆனால் நீதிமன்றத்தில் இவன் மொரோக்கோ பிரஜை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இவனிற்கான தீர்ப்பு மிகக்கடுமையாக வழங்கப்படுவதுடன் நாடுகடத்தப்படவும் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.