Paristamil Navigation Paristamil advert login

ராஜபக்சர்களின் நெருங்கிய சகா சுட்டுக்கொலை - தந்தை மகன் தொடர்பில் வெளியான தகவல்

ராஜபக்சர்களின் நெருங்கிய சகா சுட்டுக்கொலை - தந்தை மகன் தொடர்பில் வெளியான தகவல்

23 சித்திரை 2025 புதன் 13:24 | பார்வைகள் : 250


ராஜபக்சர்களின் நெருங்கிய சகா மற்றும் சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்களை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தகவல் வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டான் பிரசாரத் தனது உறவினர் வீட்டில் நடைபாதையில் இரண்டு பேருடன் விருந்து உண்டுகொண்டிருந்த போது, ​​அந்த இடத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதேவேளை, சமூக ஆர்வலர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தந்தை மற்றும் மகன் இருவரும் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல  வெளிநாட்டுப் பயணத் தடையை, புதன்கிழமை (23) விதித்தார்.

வெல்லம்பிட்டிய பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த வெளிநாட்டு பயணத் தடை பிறப்பிக்கப்பட்டது.

டான் பியசாத்தின் கொலைக்குக் காரணமானவர் வெல்லம்பிட்டியவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் ஆறாவது மாடியில் உள்ள ஒரு உறவினரின் வீட்டில் செவ்வாய்க்கிழமை (22) இரவு இருந்தபோது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக வெல்லம்பிட்டிய பொலிஸார், நீதிமன்றத்தில்  அறிக்கையை சமர்ப்பித்து, ​​ நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய தரப்பினருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக பகை இருந்ததற்கான சான்றுகள் வெளியாகியுள்ளன, அதன்படி, இரண்டு சந்தேக நபர்களையும் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்