கம்பேக் கொடுப்பாரா சூர்யா?

23 சித்திரை 2025 புதன் 13:45 | பார்வைகள் : 151
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர்களில் சூர்யாவும் ஒருவர். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அசால்டாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விடுவார். இந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திரைக்கதை வலுவாக இல்லாத காரணத்தால் இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சரிவை சந்தித்தது. எனவே ரசிகர்கள் அடுத்ததாக ரெட்ரோ படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கார்த்திக் இவரது இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தை சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. கார்த்திக் சுப்பராஜ், தன்னுடைய சினிமா கேரியரில் இதுவரை பண்ணாத கதையை, அதாவது லவ் ஸ்டோரியை கையில் எடுத்திருக்கிறார்
சூர்யாவும் சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம் போன்ற காதல் படங்களில் உணர்வுப்பூர்வமாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். அதே போல் ரெட்ரோ படத்திலும் வழக்கம்போல் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தரமான கம்பேக் கொடுப்பார் என நம்பப்படுகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 27 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.