பிரான்சுக்கு எமனாகும் 'உடல்பருமன்!'
4 புரட்டாசி 2016 ஞாயிறு 12:06 | பார்வைகள் : 18680
இன்று பிரெஞ்சு புதினத்தில் கொஞ்சம் சீரியஸ் ஆன தகவல்!! பிரான்சில், தங்கள் வயதுக்கு மீறிய உடல் எடையுடன் 25 மில்லியன் பேர்கள் இருக்கிறார்களாம். மேலும் இது 2030இல், 33 மில்லியன்களை தொட்டுவிடும் என அதிர்ச்சி தகவல்கள் தெரிவித்துள்ளார்கள்.
எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, பிரான்சில் மொத்தம் 25 மில்லியன் மக்கள் தங்கள் வயதுக்கு மீறிய உடல் எடையை கொண்டிருக்கிறார்கள். இதனால் பொருளாதார ரீதியில் பலத்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஒரு வருடத்துக்கு 20.4 பில்லியன் யூரோக்கள் வரை செலவு ஏற்படுகிறது. இது, சிகரெட் மற்றும் மது பாவனைகளினால் ஏற்படும் விளைவுகளுக்கு சமமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரி.. ஏன் நாம் குண்டாக இருப்பதால் அரசாங்கத்துக்கு என்ன இழப்பு? என கேட்டால் இருக்கிறது... நிறைய காரணங்கள்! 25 மில்லியன் மக்கள் அதிக உடல்பருமனாக இருப்பதால், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உட்பட்ட பல பிரச்சனைகளுக்கு விரைவாகவே முகம் கொடுக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக மருத்துவ செலவுகள், வேலை நிறுத்தங்கள், தவறான ஓவ்வூதியங்கள் என அரசுக்கு இழப்பு வருடத்துக்கு 20.4 பில்லியன்கள் வரை செல்கிறது.
உடல் பருமனுக்கு முக்கிய காரணியாக 'துரித உணவு' (ஃபாஸ்ட் ஃபுட்) பழக்க வழக்கங்களே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் பீட்சா, ஹம்ப் பர்கர், சிக்கன் போன்ற துரித உணவு வகையறாக்களுக்கு அதிகப்படியான வரி ஏய்ப்பு செய்யவேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மது அருந்துவதால் அரசுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு (வீதி விபத்து, மருத்துவச் செலவு போன்றவை..) சமமாக உடல் பருமன் பிரச்சனை விஸ்பரூபம் எடுத்துள்ளது பிரான்சின் எதிர்காலத்துக்கு பெரும் சவாலாகும்!