துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பூகம்பம்

23 சித்திரை 2025 புதன் 17:29 | பார்வைகள் : 235
துருக்கியின் இஸ்தான்புல் நகரை பூகம்பம் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
துருக்கியின் இஸ்தான்புல்லில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சேதங்கள் குறித்து இன்னமும் விபரங்கள் வெளியாகாத போதிலும் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் பொதுமக்கள் அச்சத்தினால் வீதிகளிற்கு ஓடினார்கள் எனவும் துருக்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆறுவருடகாலப்பகுதியில் இவ்வாறான வலுவான பூகம்பத்தை உணர்ந்ததில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.