சாரதி இல்லாத பேருந்தில் ஒன்றரை கி.மீ பயணம்!
2 புரட்டாசி 2016 வெள்ளி 10:54 | பார்வைகள் : 19416
இப்போதான் சாரதி இல்லா கார் ஒன்றை 'சக்சஸ்' செய்து காட்டியுள்ளார்கள். இந்நிலையில் சாரதி இல்லாத பேருந்து என்றால்?! ட்ரைவர்ஸ் வேலை நிறுத்தம் செய்வார்கள்... தொடருந்து சேவைகள் சிலவேளை 'லேட்' ஆகும்... அலுவலகத்துக்கு லேட்டாக செல்வீர்கள்... 'பெஸ்ட் எம்ப்ளாய்' கனவு தகர்ந்து போகும்... ஏன் வம்பென்று.. ட்ரைவரே இல்லாமல் பேருந்தை தயார் செய்துவிட்டார்கள்.!!
இன்று வெள்ளிக்கிழமை முதல் பிரான்சில் சாரதி இல்லாத பேருந்து ஒன்று இயக்கபட உள்ளது. பேருந்துள்ளுள் ட்ரைவர் இருக்க மாட்டார்... நீங்கள் ஏறி அமர்ந்ததும் உங்களை ஒன்றரை கிலோ மீட்டர்கள் தள்ளி உள்ள அடுத்த 'ஸ்டாப்'பில் இறக்கிவிடும் இந்த பேருந்து. எங்கே என்றுதானே கேட்கிறீர்கள்? லியோன் நகரில் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. Navya Arma என பெயரிடப்பட்டுள்ள குறிப்பிட்ட பேருந்து 12 பயணிகள் வரை ஏற்றிக்கொண்டு பாதசாரிகள் செல்லும் பாதையில் செல்லும்படி வடிவமைத்திருக்கிறார்கள். முன்னரே நீங்கள் சீட்டு பெற்றுக்கொண்டால்... கதவு திறக்கும்.. ஏறி அமர்ந்துகொள்ள வேண்டியதுதான் வேலை!!
வா சுருதி போலாம் என அழைத்துக்கொண்டு செல்லும் இந்த பேருந்து எப்போது பரிசுக்குள் என்றால்... இப்போதைக்கு இல்லை என்கிறார்கள்.