Paristamil Navigation Paristamil advert login

ரயில் பாஸ் திட்டம் ரத்து!!

ரயில் பாஸ் திட்டம்  ரத்து!!

24 சித்திரை 2025 வியாழன் 06:04 | பார்வைகள் : 524


2024-ஆம் ஆண்டு கோடை காலத்தில் 16 முதல் 27 வயதுக்குட்பட்ட உள்ள இளைஞர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ரயில்பாஸ்’ திட்டம், இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து அமைச்சகம் ( l'AFP le ministère des Transports) அறிவித்துள்ளது. 

ஒரு மாதத்திற்கு 49 யூரோக்கள் கட்டணத்தில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் TER மற்றும் Intercités ரயில்களில் வரம்பில்லாமல் பயணம் செய்யும் வசதியுடன் இப்பாஸ் வழங்கப்பட்டது. ஆனால், TGV ரயில்கள்(Inoui, Ouigo) இந்தச் சந்தாவில் சேர்க்கப்படவில்லை. 

2024 கோடைக்காலத்தில் 2.35 லட்சம் பாஸ் மட்டுமே விற்பனையானது, இது அரசாங்கம் எதிர்பார்த்த 7 லட்சத்திலிருந்து மிகவும் குறைவான எண்ணிக்கையாகும்.

“திட்டத்தின் முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதாலும் தற்போதைய நிதிநிலையினையும் கருத்தில் கொண்டு, குறைந்த அளவில் வெற்றி பெற்ற திட்டத்தை தொடர இயலாது” என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்