சீரற்ற காலநிலை : நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!!

24 சித்திரை 2025 வியாழன் 06:53 | பார்வைகள் : 269
மழை வெள்ளம், மின்னல் தாக்குதல்கள் போன்ற அனர்த்தங்கள் காரணமாக நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Charente-Maritime, Charente, Dordogne மற்றும் Gironde ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இரண்டாவது நாளாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்கள் உட்பட நாட்டின் மேற்கு பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ச்சியாக அடைமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள ஏரிகள், குளங்கள் ஆறுகள் நிரம்பி வழிகின்றன.
1993 ஆம் ஆண்டின் பின்னர் அதிகூடிய மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.