காரை வேகமாக ஓட்டியவருக்கு கல்யாணம் கான்சல்!!
1 புரட்டாசி 2016 வியாழன் 10:30 | பார்வைகள் : 19301
விதி நம்ம பக்கத்து சீட்ல உக்காந்திருக்கும் போது, நாம நிதானமாவும் பொறுமையாகவும் செயற்படனும். இல்லன்ணா... இதோ... தன் கல்யாணத்துக்கு கூட போக முடியாமல் காவல்துறைவசம் இருக்கிறாரே இந்த மனிதர்... இவர் கதை தான் உங்களுக்கும்!
27 வயதுடைய அந்த பிரெஞ்சு நபருக்கு அன்று (கடந்த சனிக்கிழமை) கல்யாணம். அன்று அதிகாலை 2 மணிக்கு வேகமாக தன் வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருக்கிறார். கார் வேகமாக செல்ல.., ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மறித்திருக்கின்றனர். ஆனால் அண்ணர் 'லைட்'டாக குடித்திருந்ததால்... மாட்டினால் சிக்கல் என இன்னும் வேகமாக காரை ஓட்டியிருக்கிறார்.
காவல்துறை நண்பர்கள் விடுவார்களா? பின்னாலயே துரத்திச்சென்று வளைத்து பிடித்துவிட்டார்கள். அண்ணருக்கு 0.6 வீதம் உடம்பில் அல்ககோல் பதிவாகியுள்ளது... ப்ளஸ் வேகமாக வாகனத்தை ஓட்டியுள்ளார் என இரண்டு குற்றத்துக்காக நபரை மிக மரியாதையாக காவல்நிலையத்துக்கு அழைத்து வந்துவிட்டார்கள். தெற்கு பிரான்சின் Saint-Jean-de-Vedas நகரில் இடம்பெறுகிறது இச்சம்பவம்.
காவல்துறை விசாரணைகளை எல்லாம் முடித்துக்கொண்டு... குற்றப்பணம் உட்பட இத்தியாதி விஷயங்களை எல்லாம் முடிக்க அன்று மாலை ஆகிவிட்டது. பிறகு எங்கு கல்யாணம் செய்துகொள்வது??! கல்யாணம் இரத்தானது தான் மிச்சம். பாவம் மணப்பெண்!