அமெரிக்காவில் காட்டுத்தீ - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

24 சித்திரை 2125 செவ்வாய் 09:41 | பார்வைகள் : 102
அமெரிக்காவின் நியூஜெர்சியின் கொளுத்தும் வெயில் காரணமாக வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றியுள்ளது.
காற்றின் வேகம் காரணமாக தீ மேலும் வேகமாக பரவி கடுமையாக எரிந்துவருகின்றது.
இதனால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
1300க்கும் மேற்பட்ட கட்டமைப்புக்கள் சேதமடைந்துள்ளன.
சுமார் 3000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீயினால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.