பரிஸ் : காவல்நிலையத்தில் உயிரிழந்த நபர்!!

24 சித்திரை 2025 வியாழன் 10:43 | பார்வைகள் : 457
காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரிசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் நேற்று ஏப்ரல் 23, புதன்கிழமை இரவு நபர் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். பொது இடத்தில் நின்று மது அருந்து - சட்ட ஒழுங்கை குலைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதன்போது அவர் மிகுந்த போதையில் சுயநினைவின்றி இருந்ததாகவும், அவசர மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருந்தபோதும், முதலுதவி கிச்சைகள் பலனளிக்காமல் சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இரவு 10 மணிக்கு அவர் அழைத்துவரப்பட 10.15 மணிக்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.