Paristamil Navigation Paristamil advert login

சுந்தர்.சி – வடிவேலு கூட்டணி கை கொடுத்ததா?

சுந்தர்.சி – வடிவேலு கூட்டணி கை  கொடுத்ததா?

24 சித்திரை 2025 வியாழன் 11:27 | பார்வைகள் : 152


சுந்தர்.சி இயக்கத்தில் இன்று (ஏப்ரல் 24) உலகம் முழுவதும் வெளியாகி உள்ள படம் கேங்கர்ஸ். இந்த படத்தில் சுந்தர்.சியுடன் இணைந்து வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மேலும் கேத்தரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சி. சத்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகி உள்ள இந்த படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம். அதாவது பள்ளிக்கூடம் ஒன்றில் பள்ளி தாளாளரும், அவருடைய நண்பர்களும் அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் விதமாக அநியாயங்களை செய்கின்றனர். இது தொடர்பான கேத்தரின் தெரசா காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். ஆனால் அது பலனளிக்காமல் போக உயர் அதிகாரி ஒருவருக்கு மெயில் அனுப்புகிறார். உடனடியாக ஒரு ரகசிய போலீஸ் ஒருவரை (சுந்தர். சி) அந்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கேங்கர்ஸ் படத்தின் மீதி கதை.

சுந்தர்.சி படம் என்பதால் எந்தவித லாஜிக்கையும் எதிர்பார்க்காமல் நகைச்சுவையை நம்பி மட்டுமே படத்தை பார்க்க செல்ல வேண்டும். நடிகர் வடிவேலு மீண்டும் காமெடியனாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். முதல் 20 நிமிடங்கள் நன்றாக செல்கிறது. பாரில் வரும் சண்டைக்காட்சி வேற லெவல். வடிவேலுவும் வழக்கம்போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடிகள் எதுவும் இந்த படத்தில் இல்லை என்றாலும் அவருடைய பேச்சு, உடல் மொழி போன்றவை பழைய வடிவேலுவை நினைவுபடுத்துகிறது.

வடிவேலு – சுந்தர்.சி காம்போவில் வரும் காமெடிகள் ஒர்க் அவுட் ஆகி இருந்தாலும், கேத்தரின் தெரசாவின் ஓவரான நடிப்பு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இருப்பினும் சில கிளாமர் காட்சிகளை வைத்து அதை சரி செய்ய முயற்சித்திருக்கிறார் சுந்தர்.சி.

முதல் பாதியில் வரும் காமெடிகள் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் போர்ஷனில் வடிவேலு இல்லாததால் அது சற்று சலிப்பை தருகிறது. இன்டர்வெல் வரைக்கும் நல்லா போய்க் கொண்டிருந்த கதையை இன்டர்வலுக்கு பிறகு என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? என்று கேட்கத் தோன்றுகிறது.!மேலும் முதல் பாதி பள்ளிக்கூடத்தை மையமாக வைத்து நகர்ந்தாலும், இரண்டாம் பாதி எங்கெங்கயோ சென்று சுவாரஸ்யத்தை குறைக்கிறது. இதனை ஈடு செய்யும் விதமாக வடிவேலும் ஒவ்வொரு கெட்டப்புகளிலும் வந்து அசத்தி விடுகிறார். ஆனாலும் கதைக்களம் வலுவாக இல்லாமல் பொறுமையை சோதிக்கும் போது, சரி இது சுந்தர்.சியின் படம் தானே, கமர்சியல் படம் தானே என்ற மனநிலை வந்துவிடுகிறது. மொத்தத்தில் லாஜிக்கை எதிர்பார்க்காமல், சிரித்து ரசிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் படத்தை குடும்பத்துடன் சென்று கண்டுகளிக்கலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்