சட்டம், ரொம்ப கொடூரமாக தன் கடமையைச் செய்யும்!!
31 ஆவணி 2016 புதன் 10:30 | பார்வைகள் : 19981
நேற்று முன்தினம் கூட 'பிரெஞ்சு சட்டங்கள்!' குறித்து ஒரு புதினம் சொல்லியிருந்தோம்... இதோ பாருங்கள்! இரண்டு தினங்களுக்கு முன்னர் கூட சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. அப்படி என்ன கடமை அது?
தெற்கு பிரான்சின் Villeneuve-de-la-Raho ஏரி அது. Perpignan கடற்கரையில் இருந்து மிக அருகில் இருக்கும் ஏரி. அங்கு ஒன்றரை வயது மகனுடன் அவனின் பெற்றோர்கள் உல்லாசமாக குளித்துக்கொண்டிருந்தார்கள். அந்த ஏரியில் நிர்வாணமாக குளிப்பதற்கு தடை விதித்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஒன்றரை வயது மகன் ஆடைகளை துறந்து 'ஜாலி'யா குளித்துக்கொண்டிருக்கும் போது, விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள்..., அச்சிறுவனுக்கு (ஆக்ஷுவலி அது குழந்தை!!) நீச்சல் உடை அணிவிக்கும் படி தெரிவித்துள்ளனர்.
அவர்களின் பெற்றோர்களுக்கு கடும் கோபம் வந்துவிட்டது, ' அட அது குழந்தை!' என தெரிவித்திருக்கிறார்கள் போலும், ஆனால்... குழந்தையை 'கவர்' செய்தால் தான் இடத்தை விட்டு நகர்வோம் என விடாப்பிடியாக நிக்க... இது என்னடா தலைவலியாப் போச்சு என நொந்துகொண்டே இது கால்சட்டையை எடுத்து போட்டு விட்டனர். அதன் பின்னரே தீயணைப்பு படை வீரர்கள் அங்கிருந்து அகன்றனர்.
அப்பகுதியின் மேயரிடம் இது குறித்து பத்திரிகை கேள்வி எழுப்பிய போது, 'ஏரியில் நிர்வாண குளியல் தடை செய்யப்பட்டுள்ளது!' என சுருக்கமாக முடித்துக்கொண்டார். உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?