இசை நிகழ்ச்சி தொடர்பில் அனிருத் எடுத்த அதிரடி முடிவு !

24 சித்திரை 2025 வியாழன் 11:37 | பார்வைகள் : 157
பெஹல்காம் தாக்குதல் காரணமாக அனிருத் நடத்த இருக்கும் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அனிருத் கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அடுத்த இசை நிகழ்ச்சி பெங்களூரில் நடக்க இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் இன்று, அதாவது ஏப்ரல் 24 முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பெஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதல் காரணமாக, அந்த தாக்குதலில் இறந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்த இசையமைப்பாளர் அனிருத் இன்று தொடங்க இருந்த டிக்கெட் விற்பனை தேதியை ரத்து செய்துள்ளதாகவும், டிக்கெட் விற்பனையின் புதிய தேதி ஜூன் முதல் வாரம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அறிவிப்பை அவர் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.