Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவுக்குள் நுழைய 21 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடை

ரஷ்யாவுக்குள் நுழைய 21 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடை

24 சித்திரை 2025 வியாழன் 11:40 | பார்வைகள் : 164


பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாடு தடை விதித்துள்ளது.

பிரித்தானியா ரஷ்யாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதைக் காரணம் காட்டி, ரஷ்யாவுக்குள் நுழைய 21 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடை விதித்துள்ளது.

ரஷ்யாவுக்கெதிரான பிரித்தானியாவின் விரிவான தடைகளும், உணர்ச்சிகளை அடக்காமல் பிரித்தானிய அதிகாரிகள் வெளியிட்டுவரும் அறிக்கைகளும், பிரித்தானியாவுக்கு ரஷ்யாவுடனான வெளிப்படையான மோதல் போக்கைக் கைவிடும் நோக்கம் இல்லை என்பதையே காட்டுகின்றன என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள இந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ரஷ்யாவுக்கெதிராக வெறுப்பூட்டும் அறிக்கைகள் விடுத்துள்ளதாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய அதிகாரிகள், உக்ரைன் பிரதிநிதிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்திய அதே நாளில் ரஷ்யாவின் இந்த தடை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்