இரு செயற்கைக்கோள்களை இணைத்து இஸ்ரோ சாதனை! உலகின் 4வது நாடாக உருவெடுத்த இந்தியா

24 சித்திரை 2025 வியாழன் 12:01 | பார்வைகள் : 112
இந்தியாவின் இஸ்ரோ இரு செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைந்து சாதனை படைத்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், 2028ஆம் ஆண்டு முதல் விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்பட்டு ஒருங்கிணைப்பட உள்ளன.
இதனை செயல்படுத்த SPADEX என்னும் நுட்பத்தின் கீழ், விண்வெளியில் செயற்கைக்கோளை ஒருங்கிணைத்தல், விடுவித்தல் ஆகிய பரிசோதனைகளில் வெற்றிபெற வேண்டும்.
கடந்த ஜனவரி 16ஆம் திகதி இரண்டு செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன. பின்னர் மார்ச் 13யில் இந்த இரட்டை செயற்கைக்கோள்கள் மீண்டும் பிரிக்கப்பட்டு சோதனை நடந்தது.
இந்நிலையில், இஸ்ரோவின் ஸ்பேஸ் டாக்கிங் பரிசோதனையின் ஒரு பகுதியாக செயற்கைக்கோள்களை இணைக்கும் பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது.
செயற்கைக்கோள்களை இணைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இந்த சாதனையை அடைந்த உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.